நபர் 1 : ஏன்யா உன் மருமகன் பொங்கலுக்கு வருவானா ?
நபர் 2 : அவேய்ன் பழைய சோத்துக்கே பல்ல இளிச்சுகிட்டு வருவான் பொங்கலுக்கு வரமாட்டானா?
மருமகனுங்க விழுந்து விழுந்து சிரிச்சுக்கலாம்.
இந்த மாட்டு பொங்கலுக்கு ( ! ? ) மாமனாரு ஊருக்கு போயிருந்தேன், அன்னைக்கு சூரிய கிரகணமாம் வெளியே போகக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. சரி அப்படியே பனங்காட்டுக்கு போயிட்டு வருவோம்ன்னு ( தை பொறந்துருச்சுன்னா வழி மட்டும் பொறக்காது கள்ளும் ;) பொறந்துடும்ல்ல) கெளம்பி வெளியே வந்தா பக்கத்து வீட்டு வாசலில் ஒரு சின்ன சந்தன கிண்ணத்துல உலக்கையை நிறுத்தி வச்சுருக்காங்க என்னடா இது மேஜிக்குன்னு நினைச்சு கேட்டேன், அதுக்கு அது சூரிய கிரகணத்தின் போது மட்டும் அப்படி நிக்குமாம், கிரகணம் முடிஞ்சா கீழ விழுந்துடுமாம். 12.30 இந்த படம் எடுத்தேன் 3.15க்குலாம் கீழ விழுந்துடுச்சு உலக்கை "முறம்" மாதிரி தமிழர்களின் வாழ்வோடு பல்லாயிரம் வருசமா இணைந்த ஒன்று இவை சந்திர சூரிய கிரகணத்தின் பொழுது அவற்றை அளக்கும் கருவியாக பயன்படுவது கண்டு குறிப்பாய் கிராமத்தில் இவை ஒரு இயல்பான நிகழ்வாய் இருப்பதும் வியப்பூட்டியது.