சனி, 16 ஜனவரி, 2010

கதிர் மதி கூடலின் பொழுது....

மதுரை முத்து அண்மையில் சொன்ன ஒரு நகைச்சுவை

நபர் 1 : ஏன்யா உன் மருமகன் பொங்கலுக்கு வருவானா ?

நபர் 2 : அவேய்ன் பழைய சோத்துக்கே பல்ல இளிச்சுகிட்டு வருவான் பொங்கலுக்கு வரமாட்டானா?

மருமகனுங்க விழுந்து விழுந்து சிரிச்சுக்கலாம்.


இந்த மாட்டு பொங்கலுக்கு ( ! ? ) மாமனாரு ஊருக்கு போயிருந்தேன், அன்னைக்கு சூரிய கிரகணமாம் வெளியே போகக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. சரி அப்படியே பனங்காட்டுக்கு போயிட்டு வருவோம்ன்னு ( தை பொறந்துருச்சுன்னா வழி மட்டும் பொறக்காது கள்ளும் ;) பொறந்துடும்ல்ல) கெளம்பி வெளியே வந்தா பக்கத்து வீட்டு வாசலில் ஒரு சின்ன சந்தன கிண்ணத்துல உலக்கையை நிறுத்தி வச்சுருக்காங்க என்னடா இது மேஜிக்குன்னு நினைச்சு கேட்டேன், அதுக்கு அது சூரிய கிரகணத்தின் போது மட்டும் அப்படி நிக்குமாம், கிரகணம் முடிஞ்சா கீழ விழுந்துடுமாம். 12.30 இந்த படம் எடுத்தேன் 3.15க்குலாம் கீழ விழுந்துடுச்சு உலக்கை "முறம்" மாதிரி தமிழர்களின் வாழ்வோடு பல்லாயிரம் வருசமா இணைந்த ஒன்று இவை சந்திர சூரிய கிரகணத்தின் பொழுது அவற்றை அளக்கும் கருவியாக பயன்படுவது கண்டு குறிப்பாய் கிராமத்தில் இவை ஒரு இயல்பான நிகழ்வாய் இருப்பதும் வியப்பூட்டியது.













ஞாயிறு, 10 ஜனவரி, 2010

சூரியனின் காந்திமதி இவள் !



காந்தி மீது எப்போதுமே ஈர்ப்பு உண்டு, கரம்சந்த் காந்தியில்லை சூரியகாந்தியின் மீதுதான். அவசர வேலையாக தூத்துக்குடி சென்று வரும் வழியில் பெரிய பாரம் குறைந்த ஒரு மனநிலையில் பட்டாசு சோள வயல்களை ரசித்தபடி வந்து கொண்டிருந்த பொழுது இடையில் ஒரு நிலத்தில் மட்டும் சூரியகாந்தி விதைத்து அப்போதுதான் அறுத்திருத்தார்கள், என்ன நினைவோ ஒரு நாலைந்து செடிகளை விட்டிருந்தார்கள் படமாக்காமல் விட்டால் பாவமே சேரும், இல்லையா ?








வெள்ளி, 8 ஜனவரி, 2010

தகதிமித்தா....



ஆடா நிழற்பட கொலுசுகளின்
ஓசை புலன்களில்
ஒலிக்கிறது



சனி, 26 டிசம்பர், 2009

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

ஒரு நிழற்படக்கருவி வாங்கனும் வாங்கனும்ன்னு கொலவெறியோட இருந்து வாங்கிட்டோம்ல...


நல்ல பாம்பு கணக்கா நாள் பூராம் படம் எடுத்துட்டு திரியுறுதான் இனி மெயின் வேலை